Writeups

COVID-19 கால புதியஇயல்பான நடத்தைகளுக்கானமக்கள் இயக்கம்

WriteUps By S MURUGESAN


COVID-19 கால புதியஇயல்பான நடத்தைகளுக்கானமக்கள் இயக்கம்:

மத்திய அரசு மற்றும்ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையின்   படிஅனைவரும் COVID19 கால நடத்தைகளைப் பின்பற்றுமாறு  அறிவுறுத்தப்படுகிறது.

1. உங்கள்கைகளை தவறாமல் கழுவுங்கள்

2. சமூகவிலகலை  கடைபிடியுங்கள்

3. உங்கள்முகவுறையை  சரியாகஅணியுங்கள்

உங்கள் கைகளை தவறாமல் கழுவுதல் / அடிக்கடி கைகளை கழுவுதல்:

உங்கள் கைகளை சோப்புமற்றும் தண்ணீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும், குறிப்பாகநீங்கள் ஒரு பொது இடத்தில்இருந்தபின் அல்லது இருமல் அல்லதுதும்மலுக்குப் பிறகு.

கீழ்கண்ட நிலைகளில்கை  கழுவவேண்டியது அவசியம்:

  • உண்ணும்முன் அல்லது உணவு தயாரிக்கும்முன்
  • உங்கள்முகத்தைத் தொடும் முன்
  • கழிவறையைபயன்படுத்திய பிறகு
  • பொதுஇடங்களுக்கு சென்று  விட்டுவந்த பிறகு
  • இருமல்அல்லது தும்மலுக்குப் பிறகு
  • உங்கள்முகவுறையைக் கையாண்ட பிறகு
  • நோய்வாய்ப்பட்டஒருவரை கவனித்த பிறகு
  • விலங்குகள்அல்லது செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகு

சமூக விலகலை கடைபிடித்தல் / நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல்:

உங்கள்வீட்டிற்குள்:

நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

முடிந்தால், நோய்வாய்ப்பட்ட நபருக்கும் மற்ற வீட்டு உறுப்பினர்களுக்கும்இடையில் 6 அடி இடைவெளி இருக்குமாறுபார்த்துக்கொள்ளவும் .

உங்கள்வீட்டிற்கு வெளியே:

உங்களுக்கும் மற்ற நபர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

அறிகுறிகள் இல்லாத சிலரிடம் இருந்தும்நோய்  பரவக்கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்றவர்களிடமிருந்து குறைந்தது 6 அடி தூரம் விலகி  இருங்கள்.

மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது நோய்வாய்ப்படும்ஆபத்து அதிகம்  உள்ளவர்களுக்குமிகவும் முக்கியமானது.

முகவுறையை  சரியாக அணிதல்:

COVID19 பரவுவதைக் கட்டுப்படுத்த முகவுறை அணிவது ஒருமுக்கியமான நடவடிக்கையாகும்

முகவுறைஅணியும்போது நினைவில் கொள்ள வேண்டியவை :

  • வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு முகவுறையை அணியுங்கள்.
  • முகவுறையைஅணிவதற்கு முன்பு உங்கள் கைகளைசுத்தம் செய்யுங்கள்.
  • முகவுறையின்பக்கங்களில் எந்த இடைவெளியையும் விட்டுவிடாமல்முகவுறையை சரி செய்யவும்.
  • முகவுறைஉங்கள் மூக்கு, வாய் மற்றும்கன்னத்தை நான்கு மூடியுள்ளது என்பதைஉறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • முகவுறையைகழற்றிய பின் உங்கள் கைகளை  சுத்தம்செய்யுங்கள்.
Share this :

Blogs for You

Stay Connected