WriteUps By S MURUGESAN
வ.எண் | உணவுப் பொருள் | நஞ்சுக் குறிகுணம் (அளவிற்கு அதிகமானால்) | நஞ்சு முறிவு |
1. | உளுந்து | அசீரணம், நெஞ்சுக் கரிப்பு, வயிற்றுக் கடுப்பு, மலச்சிக்கல் | கொள்ளுக்காய் வேளை, மிளகு, சீரகம் சம எடை -கஷாயம் |
2. | நெய் | வயிற்று மந்தம் | பசுவின் பால் |
3. | வேர்க்கடலை | தலை சுற்றல், நீர்வேட்கை | கரும்பு வெல்லம் |
4. | தேங்காய் | வாந்தி, மயக்கம், நீர்வேட்கை, கழிச்சல் | கரும்பு வெல்லம்/ பச்சரிசி |
5. | கோழிமுட்டை | பசி மந்தம், புளி ஏப்பம், செரியாமை | முள்ளங்கி |
6. | பலாப்பழம் | மந்தம், பசியின்மை, ஏப்பம், வாய் கரித்தல், மயக்கம் | தேன்/ நெய் |
7. | பாலாடை | பசி மந்தம், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், கழிச்சல் | புளித்த மோர் |
8. | மிளகாய் | குடல் புண், வாய்ப்புண், வயிற்று நோய், சீதக் கழிச்சல் | கொத்தமல்லி, நெய் |
9. | நுங்கு | மந்தம், வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், கழிச்சல் | பெருங்காயம் பொரித்து உண்ணல் |
10. | சோறு | செரியாமை, பொருமல், புளித்தேப்பம், நெஞ்சுக் கரித்தல், பேதி | சீரகம்- கஷாயம் வைத்து குடித்தல் |
11. | புளித்த தயிர் | மந்தம், சோர்வு, தூக்கம் | கடுகைப் பொரித்து கஷாயம் வைத்து குடிக்கவும் |
12. | கோதுமை | வயிற்றுப் பொருமல், பசி மந்தம், கழிச்சல் | மிளகாய்/ நெய்/ பசும்பால் |